நாளை 10 மணிக்குள் தீர்வை பெற்றுத் தருவேன்; இன்றேல் முழுக் கிழக்கும் கொதித்தெழும் அம்பிட்டிய சுமண தேரர்

கொழும்பிலிருந்து வந்த பொய்யர்களின் பொய் வாக்குறுதிகளை நம்ப நாம் தயாரில்லை. வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். நாளை (22) காலை 10 மணிக்கிடையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தருவேன்’ என மட்டக்களப்பு விஹாராதிபதி அம்பிட்டிய சுமண தேரர் தெரிவித்தார்.

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி முன்னெடுக்கப்படும் உண்ணாவிரதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்முனையில் கடந்த 5 தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் சாகும்வரையிலான உண்ணா விரதத்தை முடித்து வைப்பதற்காக கொழும்பிலிருந்து உண்ணாவிரதம் இடம்பெறும் இடத்துக்குச் சென்றிருந்த அமைச்சர்களான மனோ கணேசன் தயா கமகே மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் அங்கு உரையாற்றிய போதே மட்டக்களப்பு விஹாராதிபதி அம்பிட்டிய சுமண தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்முனை தமிழ் மக்களின் பிரச்சினை மட்டுமல்ல முழு கிழக்கு மாகாணத்திலும் நிலவும் தமிழர் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும். அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வைத் தராவிட்டால் முழு கிழக்கு மாகாணமும் கொதித்தெழும். என்றும் அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்