பதற்றமாகும் கல்முனை?: 350 பிக்குகள் இன்று வருகிறார்கள்!

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடத்தப்படும் உண்ணாவிரத போராட்டம் இன்று 6ம் நாளாகவும் தொடர்கிறது. நேற்று 5வது நாள் போராட்டத்தின் போது, அரச தரப்பின் வாக்குறுயுடன் வந்த பிரமுகர்கள் விரட்டியடிக்கப்பட்டிருந்தனர். வாக்குறுதியை ஏற்றுக்கொள்ளாமல் போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று 350 பௌத்த பிக்குகள் கல்முனைக்கு வந்து, போராட்டத்திற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கல்முனையை தரமுயர்த்தக் கூடாது என முஸ்லிம்கள் நடத்தும் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் அமீர் அலி, முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இன்று சென்று தமது ஆதரவை தருவதாக தெரிவித்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்