இலங்கை குண்டு வெடிப்பு சந்தேகநபர் கன்னியாகுமரியில் கைது

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில்  கன்னியாகுமரியில் ஒருவரை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து விசாரணையை முன்னெடுத்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கன்னியாகுமரியில் கடையொன்றினை நடத்தி வரும்  இம்ரான் கான் என்ற இளைஞரையே அதிகாரிகள் நேற்று (வெள்ளிக்கிழமை)  கைது செய்துள்ளனர்.

இலங்கையில் குண்டுத் தாக்குதல்களை நடத்திய தீவிரவாதிகள் தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்ததாக தகவல் வெளியிடப்பட்டது.

குறித்த தகவலுக்கமைய தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதுடன் கோவை மற்றும் மதுரையிலுள்ள  சில வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது,  பென்ட்ரைவ், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட முக்கியப் பொருட்களை அவர்கள் கைப்பற்றியிருந்தனர்.

இந்நிலையில் இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக கன்னியாகுமரியிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியபோதே சந்தேகத்தின் பேரில் குறித்த இளைஞனை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்