கல்முனை விவகாரத்தில் தடை ஏற்படுத்தியது முஸ்லிம் சமூகமே – களத்தில் சுமந்திரன்

கல்முனை பிரதேச செயலகம் ஒரு முழுமையான பிரதேச செயலகமாக இருக்கின்றபோதிலும் சகோதர முஸ்லிம் சமூகம் அதனை முழுமையான அதிகாரங்களுடன் இயங்கவிடாமல் தடுத்துவந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவித்தார்.

இதனை நிவர்த்திசெய்து பூரண அதிகாரங்களுடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இயங்கவேண்டும் என்று தாம் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு கோரி முன்னெடுக்கப்படும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) அரசாங்கத்தின் செய்தியோடுச் சென்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஒரு முழுமையான பிரதேச செயலகம். இதனை தரமுயர்த்த எதனையும் செய்யவேண்டியது இல்லை. ஆனால் முழுமையான பிரதேச செயலகத்தினை முழுமையாக இயங்கவிடாமல் தடுக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டுள்ளது. அது நீக்கப்படவேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும்” என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்