சுட்டமைப்பு மாநகர உறுப்பினரைத் தவிர, கல்முனை போராட்டம் தற்காலிக நிறுத்தம்!

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக இப்போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுமென ஞானசார தேரர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து நால்வர் தமது போராட்டத்தை நிறைவு செய்துள்ளனர். எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜன் நீரை மட்டும் அருந்தி தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என அங்கிருந்துகிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஏனையவர்களும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்