வெற்றிலைக்கேணி அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா

ஆயிரக்கணக்கான மக்களின் மத்தியில் வெற்றிலைக்கேணி அந்தோனியார் ஆலயத்தின் பெருநாள் மற்றும் கடைத்திருவிழா இடம்பெற்றது.

யாழ். வடமராச்சி கிழக்கு வெற்றிலைக்கேணி அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருநாள் பூசை இன்றையதினம் (சனிக்கிழமை) தேவாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு தேவாலயத்தின் பங்குத்தந்தை அன்டனி மைக்டொனால் தலைமையில் இடம்பெற்றது.

அத்துடன் இப்பெறுநாளில் அந்தோனியார் திருச்சொருபம் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் உலாவந்ததுடன், தேவாலயத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்