அபிவிருத்திகளை மேற்கொள்ளவே அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறோம் – செல்வம்

தமிழ்ப் பிரதேசங்களை அபிவிருத்தியடைச் செய்ய வேண்டுமெனில், அரசாங்கத்துடன் இணக்கத்துடன் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மேலும், முஸ்லிம் பிரதிநிதிகள் கடந்தகாலங்களில் அரசாங்கங்களுடன் இணங்கி செயற்பட்டமையாலேயே முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் வவுனியா பாலமோட்டையில் சனசமுக நிலையம் இன்று (புதன்கிழமை) காலை திறந்து வைக்கப்பட்டது

பாலமோட்டை கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் கு.குருபரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “ஆயுத போராட்டத்தை மௌனித்த பின்னர் தமிர்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டிய கடப்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு காணப்பட்டது. புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளித்தமையினாலேயே தமிழர் பகுதியில் சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

அதேபோல முஸ்லிம் பிரதிநிதிகள் கடந்தகாலங்களில் அரசாங்கங்களுடன் இணங்கி செயற்பட்டமையாலேயே அவர்கள் முன்னேரியுள்ளனர்” என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்