விட்டுக்கொடுப்புக்களையும் சகிப்புத்தன்மைடைய மனதை தளரவிடாமல் விசுவாசமாக கட்சிக்குள் பணியாற்ற கூடியவர்கள் எமது கட்சிக்கு தேவை

இளைஞர்கள் தங்களை தயார்படுத்தவேண்டும். இதற்கு பல விட்டுக்கொடுப்புக்களையும் சகிப்புத்தன்மைடைய மனதை தளரவிடாமல் மிகவும் விசுவாசமாக கட்சிக்குள் பணியாற்ற கூடியவர்கள் எமது கட்சிக்கு தேவை என்கிறார்
இலங்கைத் தமிழரசு க் கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர் சேயோன்
கட்ணியின் மாதாடு மற்றும் சமகால நிலமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்தார்
இது தொடர் பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

1.இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளுர்கள்  இதனை எவ்வாறு பார்கிறிர்கள் ?

இலங்கை தமிழரசுக்கட்சியில் இவ்வாறான முக்கிய பொறுப்பில் தெரிவானதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

இது ஒரு பொறுப்பே தவிரத வேறுறொன்றுமில்லை இந்த பொறுப்பு இன்னொருநாள் இன்னொருவரிடம் சென்றுவிடும் ஆகவே கிடைக்கப்பட்ட அந்தக்காலத்தில் வாலிப முன்னணியின் வளர்ச்சியிலும் கட்சியின் சிறந்த செயற்பாடுகளுக்கும் கடந்தகால அனுபவங்களைக் கொண்டு வாலிபர் கட்டமைப்பை சீராக்கி அடுத்த சந்ததிக்கு கையளிக்கமுடியும்என நினைக்கின்றேன்தேசியத்தின் மீது கொண்ட மற்றும் கட்சிமீது கொண்ட விசுவாசமுமே என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து இருக்கின்றது என நினைக்கின்றேன்.

 1. இலங்கைத் தமிழ் அரசு கட்சி நீண்ட வரலாறு கொண்ட கட்சியில் தற்போதைய நிலைமைகள் ஏவ்வாறு எவ்வாறு உள்ளது ?நீண்ட பாரம்பரியம் கொண்ட கட்சியில் தற்போதைய நிலையில் குறிப்பாக 2009 போர் மௌனிக்கப்பட்டதன் பின்பு எமது போராட்டம் சர்வதேச பார்வை்ககுள் நேரடியாக சென்றதன் பின் ஒரு கட்டமைக்கப்பட்ட ஜனநாக சக்தியாக செயற்பட்ட தமிழ் மக்களினுடைய முக்கிய தேவையாக இருக்கின்ற அரசியல் தீர்வு விடையத்தில் க்றறுக்கொண்டபாடங்களை படிப்பினையை வைத்துக்கொண்டு பிராந்திய வல்லாதிக்க சக்திகளின் பிடிக்குள் சிக்குப்படாமல் அதே நேரம் பகைத்துக்க்கொள்ளாமல் இராஜ ரீதியாக நகர்வை தற்பொழுது மேற்கொண்டு செல்கனி்றதுஇது மிகவும் சிரமமான விடயம் இதை இலகுவாக விளங்கிக்கொள்ளவும் முடியாதுஇதன் பெறுபேறுகள் உடனுக்குடன் கிடைப்பதல்ல இது நீண்ட நாட்கள் படிமுறையில் கிடைக்கின்ற பெறுபேறாகத்தான் இது அமையும் இதை அடைவதற்கு நாம் எல்லோரும் விட்டுக்கொடுப்புக்களை செய்து முழுமனதோடு இயங்கினால்தான் இலகுவாக பெற்றுக்கொள்ளப்படும் இந்த அரசில் தீர்வை பெற்றுக்கொள்வதற்காக தமிழ் மக்களுக்காக இலங்கை தமிழரசுக்கட்சி பல விட்டுக்கொடுப்புக்களை செய்து வருகின்றதுஎன்றுதான் இன்றைய நிலையில் உண்மையாகவுள்ளது.
  3)  
  அரசியல் கட்சி களைப் பார்த்தால் இளைஞர்களை கட்சிக்கிள் உள்வாங்கி கொண்டாலும் பதவ நிலைகளில் செயற்பட விட மாட்டார்கள் என்ற நிலை யுள்ளது இந்த நிலை தமிழரசு கட்சி க்குள் எவ்வாறு உள்ளது?

  இளைஞர்களை பதவி நிலைகளுக்கு விடுகின்றார்கள்இல்லை என்பதற்கு அப்பால் அந்த இடத்திற்கு இளைஞர்கள் தாங்கள் வருவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதைத்தான் முக்கியமாக பார்க்கவேண்டும்நாங்கள் எங்களை தயார்படுத்தவேண்டும்இதற்கு பல விட்டுக்கொடுப்புக்களையும் சகிப்புத்தன்மைடைய மனதை தளரவிடாமல் மிகவும் விகூசாசமாக கட்சிக்குள் பணியாற்றவேண்டும் அப்படிப்பட்ட இளைஞர்களை தாகாக அந்த பொறுப்பு நிலைகளில் கொண்டு வந்து நிறுத்திவிடும்அதுதான் ஒரு பொருத்தமான தெரிவாகவும் அமையும்.

  எமது கட்சியை பெறுத்தமட்டில் நீண்ட வரலாறு கொண்ட கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள் பலபேர் இருப்பார்கள் அதையும் தாண்டி கட்சியில் நிராகரிக்கமுடியாத ஆளுமையாக இளைஞர்கள் வந்தல் அந்த வாய்ப்பு தானாக அமையும் இவ்வாறு கடந்த காலங்களில் நடைபெற்று இருக்கின்றதுஆகவே சிறப்பான செயற்பாடுகள் மூலம் பொருத்தமானவர்கள் வருகின்றபோது இலங்கை தமிழரசுக்கட்சியின் மாத்தரம் அல்ல வேற எந்தக் கட்சியும் இலகுவாக தட்டிக் கழித்துவிட முடியாது. .ஆகவே இலங்கைத் தமிழரசுக்கட்சியின்க்குள் திறமையானவர்கட்கு வாய்ப்புக்கள் இருக்கின்றதுஅது எமது செயற்பாட்டில் மூலமே அமையும்.
  4) 
  உங்கள் தந்தையும் சிறந்த அரசியல் செயற்பாட்டாளராக இருந்துள்ளார் அந்த நிலையில் உங்கள் பதவி நிலையில் ஏவ்வாறான செயற்பாட்டை உங்களால் செய்ய முடியும் ?

  எனது தந்தை ஒரு செயற்பாட்டாளர் என்பதற்கு அப்பால் மானசீகமாக சட்சியை நேசித்தவர்களில் ஒருவர் அதனால் பலமுறை உத்தியோகம் பறிக்கப்பட்டு இடமாங்கள் பழவாங்கல்கள் நடைபெற்று பூசா வெலிக்கடை என சிறைகள் சென்று எமது சகோதரர்களும் தமிழத் தேசியத்திற்காகய் சிறைவாசம் அனுபவித்துள்ளார்கள்இதன் நிமித்தம் தந்தை அடிக்கடிசெல்லுவார் நடக்காக கட்சி கட்சிக்காகவே நாம் இருக்கவேண்டும் கட்சி மக்களுக்கு இருக்கின்றதுஆகவே நாம் மக்களுக்காக இருக்கின்றோம் என்ற சிந்தனையும் தந்தையின் கடந்தகால செயற்பாடுகளையும் என்னை மிக சிறுவயதில் இலங்கை தமிழரசுக்கட்சியில் முழ நேர தொண்டனாக செயற்படவைத்து ஒரு தமிழ்த்தேசியவாதியாக தடம் மாற பயணிக்க வழிகாட்டுகின்றுதுஇந்த அனுபவங்களை வைத்துக்கொண்டு இன்றைய கால சூழலுக்கு ஏற்றால் போல் இளைய சமுதாயத்தை இன்றும் கட்சியோடு நெருக்மாக சேர்ந்து வலுப்படுத்தி கட்சியின் எதிர்காலத்தில் சிறந்த தலைவர்களை உருவாக செயற்பாடுகளை முன்னெடுக்க இருக்கின்றோம்.
  5)  
  மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதிப்படுத்தும் நீங்கள் அங்குள்ள தமிழ் மக்களின் நிலை எவ்வாறு உள்ளது அபிவிருத்தி திட்டங்கள் எவ்வாறு உள்ளது ?

  மட்டக்களப்பு மாவட்த்தை்ப பொறுத்தவரையில் தமிழ்த்தேசியத்தில் பற்றுக்கொண்ட மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள்அதில் மாற்றுக் கருத்தில்லைஆனால் குறிப்பாக வாழ்வாதார ரீதியாக மிகவும் சிரப்படும் நிலை 2009ஆம் ஆண்டுக்கு பின் வெகுவாக காணப்படுகின்றதுஇதற்கு பல காரணங்கள் இருக்கின்றனகுறிப்பாக யுத்த காலங்களில் பொருளாதார இளப்புக்களை சந்தித்துஇன்றைய விலைவாசி ஏற்றம் இதைவிட குறிப்பாக சொல்லப்போனால் உள்ளூராட்சி உற்பத்திகள் அதிகரிக்கப்பட்டு தொழில் வாய்ப்பு ஏற்படுத்தப்படவேண்டும் பிராந்திய வளங்கள் சார்ந்த தொழில் சாலைகள் உருவாக்கப்படவேண்டும்அதன் மூலம் வேலை வாய்ப்பு வருமானங்களை கூட்டிக்கொள்ளலாம்மட்டக்கள்பிபல் குறிப்பாக தமிழ் பிரதேசங்களில் பாரிய அளவிலான தொழில் சாலைகள் ஒரு கூட இல்லாத நிலை இன்றுவரை காணப்படுவது ஒரு துரதிஸ்ரவசமே.

  அபிவிருத்தியை பொறுத்தவரையில் கடந்த காலங்களை விட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதிகமாக செய்கின்றதுஇருந்தாலும் சகோதர சமூகம் அரசியல் வாதிகள்அரசோடு இணைந்து அமைச் செயற்படுகளை எடுத்துக்கொண்டு அதன் மூலம் வருகின்ற நிதிகளையும் அவர்களது குறுகிய பிரதேசத்திற்குள் அபிவிருத்தி செய்கின்றபோது பெரிதாக தெரிகின்றதுதமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பரவலாக செய்கின்றபோது சிறிதாக தெரிகின்றதுதொகை அடிப்படையில் பார்த்தால் பாரிய வேறுபாடு இருக்கமுடியாது இருந்தாலும் அண்மைக் காலமா அரசியல் மாற்றம் எங்களது இன்னுமொரு சந்ததி வாக்களிக்கும் உரிமைகள் வந்திருக்கிறார்கள்அவர்களிடம் இருந்து அமைச்சுப் பதவிகள் எடுக்கவேண்டும் தமிழ் அமைச்சர்களும் மட்டக்களப்பில் இருக்கவேண்டும் என்கின்ற கருத்தும் இருக்கின்றது.

  இதை வைத்துக்கொண்டு சிலர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மை கட்சிகளோடு சேர்ந்து.கொண்டு எங்களை அமைச்சர்களுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மக்கள் நிராகரிக்கின்றார்கள்என்றும் அதற்காக சில ஊடகங்களையும் பயன்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபடுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.. இக்கருத்தானது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உரிமையுடன் கூடிய அபிவிரு்த்தியை செய்யுங்கள் என்பதை தவிர வேறெந்த பொருள்களும் அல்ல.
  6) 
  மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த வரையில்  மூவின மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் அரசியல் வாதிகளின்   செயற்பாடுகள் எவ்வாறு உள்ளது?

  சில அரசியல் வாதிகளின் சுய நலப்போக்குகள்தான் நாட்டின் நல்லிணக்கத்துக்கு பாரிய சவாலாக இருக்கிறது.
  7)  
  உயர்த்த ஞாயிறு தாக்குதல் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடைபெற்ரபோது இளைஞர்கள் எத்தகைய வேலைத்திட்டத்தை மேற்கொண்டார்கள் ?

  உயிர்த்த ஞாயிறு தாக்குலின் பின் இளைஞர்கலொல்லாம் வேதனையின் விளிம்பிற்கு தள்ளப்பட்டார்கள்சம்பவஇடத்தில் அரசியல் வேறுபாடு இன்றி இளைஞர்கள் அனைவரும் ஒன்றாக பணியாற்றினார்கள்சடலங்களை இனங்கானுவதில் இருந்து கஸ்ரப்பட்டவர்கள் ஏற்றி இறக்குவதில் இருந்து இதர வேலைகளில் மனித்த் தன்மையோடு செயற்பட்டார்கள் எமது மட்டக்களப்பு வாலிப முன்னணியினரும் உறுப்பினர்களும் இணைந்துகொண்டு அனைத்து செயற்பாடுகளிலும் கங்கெடுத்து இருந்தோம்.அம்பாறையில் இருந்த சில உறுப்பினர்களும் இணைந்து இருந்தார்கள்இதன்மூலம் அனைத்து உள்ளங்களுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் தலைவர் என்ற வகையில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்
  8) 
  இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு அமையும் உங்கள் வேலைத்திட்டம் என்ன?

  மிகவிரைவில் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு நடைபெற இருக்கிறதுஅதற்கிடையில் எமது மத்திய குழு கூடி வருடாந்த வேலைத்திட்டத்தை தயாரித்து உடனே செயற்பாட்டை ஆரம்பிக்கின்றோம்குறிப்பாக இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்றால்போல் கட்சியின் செயற்பாடுளுக்கு கட்டமைப்பை முன் இருந்ததைவிட மாநில ரீதியாக செயற்படுத்துவது சிறப்பா இருக்கும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்