மலேசியாவில் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளின் சட்டவிரோத குடியேறிகள் கைது

மலேசியாவின் செலாங்கோர் மாநிலத்தில் உள்ள ஷா அலாம், சேட்டிய அலாம் பகுதிகளில் குடிவரவுத்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 39 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆப்ரேஷன் செலீரா (Ops Selera) என்ற பெயரில் நடந்த இத்தேடுதல் வேட்டையின் போது, பல வெளிநாட்டினர் பின் கதவு மற்றும் ஜன்னல் வழியாக தப்ப முயன்றதாக கூறியிருக்கிறார் குடிவரவுத்துறையின் துணை இயக்குனர் ஜெனரல் முகமது பவுசி. இதில் கைது செய்யப்பட்ட குடியேறிகள் உணவகங்களில் பணியாற்றி வந்துள்ளார்கள். 

“சோதனையின் போது அவர்களிடம் முறையான தற்காலிக வேலைவாய்ப்பு விசா இல்லாமல் இருந்தது தெரிய வந்தது,” என முகமது பவுசி தெரிவித்துள்ளார். 

இதில் 12 இந்தியர்கள், 9 வங்கதேசிகள், 9 மியான்மரிகள், 5 பாகிஸ்தானியர்கள், பிலிப்பனைசை சேர்ந்த 4 பேர் என 39 குடியேறிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஆட்கடத்தலுக்கு தடுப்புச் சட்டம், குடிவரவு மற்றும் கடவுச்சீட்டு சட்டத்தின் கீழ் இவ்வழக்கு  விசாரிக்கப்பட்டு வருகிறது. 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்