பிரியா வாரியாருக்கு தேடி வந்த வாய்ப்பு! முக்கிய இயக்குனரின் படத்தில்

ஒரு அடார் லவ் என்னும் படத்தின் பாடல் இணையதளத்தில் வெளியானதன் மூலம் ஒரே நாளில் பிரபலமானவர் பிரியா வாரியார்.

இந்த நிகழ்வை கொண்டு அப்படத்தில் ஹீரோயினுக்கு பதிலாக இயக்குனர் இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக காட்சிகள் அமைத்திருந்தார்.

ஆனால் படம் ரசிகர்களிடத்தில் எடுபடவில்லை. விளம்பரங்களில் நடித்து வந்த பிரியா வாரியார் ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் மயாங்க் பிரகாஷ் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் நிதின், ரகுல் பிரீத் சிங் ஜோடி நடிக்கிறார்களாம். விரைவில் படத்தின் ஷுட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்