அதிமுக்கிய பதவிகளை வகித்த இருவரை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு! பரபரப்பாகும் கொழும்பு

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே தகவல்கள் அறிந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டீ. லி​வேரா, பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக செயற்பட்ட ஹேமசிறி பெர்னாண்டோ, ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்ட போதும் அவர் அதனை மறுத்திருந்தார். இதனையடுத்து அவருக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பாதுகாப்பு துறையுடன் சம்பந்தப்பட்ட இருவரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளமையானது கொழும்பு அரசியல் மட்டத்தில் பரபரப்பு நிலையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்