நெளுக்குளம் முருகனுக்கு சாந்தி எம்.பி. நிதி ஒதுக்கீடு!

 கடந்த 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றலின் மற்றுமொரு கட்டமாக  நெளுக்|குளம் முருகன் ஆலயஆலய பரிபாலனசபையின் கோரிக்கையின் பிரகாரம் வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவால் 2 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் அகில இலங்கை துணைத்தலைவரும், வவுனியா மாவட்ட தலைவருமாகிய பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்களின் கோரிக்கைக்கிணங்க, வவுனியாவின் நெளுக்குளம் வட்டாரத்திற்குட்பட்ட நெளுக்குளம் ஶ்ரீ முருகன் ஆலய புனரமைப்பிற்காக முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரும், தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட தலைவருமான மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் சிபார்சில் கம்பரெலிய பகுதி 02 திட்டத்தின் கீழ் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா அவர்களினால் ரூபா.2,00,000.00 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்