மரணதண்டனையை நிறுத்துமாறு கோரி மன்றில் முன்னிலையாகினார் சுமந்திரன்

மரணதண்டனையை நிறுத்துமாறு கோரி
மன்றில் முன்னிலையாகினார் சுமந்திரன்

நாளை வரை வழக்கு ஒத்திவைப்பு

மரணதண்டனையை நிறுத்துமாறு கோரி மரணதண்டனைக் கைதியொருவர் உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் நேற்று சுமந்திரன் முன்னிலையானார். வழக்கு நாளை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கையில் மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட முடிவை எதிர்த்து இதுவரை 13 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஊடகவியலாளர் ஒருவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் சட்டத்தரணி நிரான் அங்கிட்டல் முன்னிலையாகி இடைக்காலத் தடை உத்தரவு பெற்ற நிலையில், தற்போது மேலும் 12 வழக்குகள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட 12 வழக்குகளில் மரணதண்டனைக் கைதியொருவரின் வழக்கு நேற்று வியாழக்கிழமை விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு நாளை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. ஏனைய 11 வழக்குகளும் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்