ஞானாசார தேரர் விடுதலை செய்யப்பட்டமை கடிநாயை அவிழ்த்து விட்டமை போன்றாகும்! சுமந்திரன் எம்.பி. காட்டத்துடன் கருத்து

பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் விடுதலைகடிநாயை அவிழ்த்துவிட்ட செயலுக்கு ஒப்பானது. இந்த நெருக்கடியான நேரத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டதன் பின்னால் பல காரணங்கள் உள்ளன. ஒருவகையில் அரசும் இந்த விடயத்தை நடக்கட்டும் என்றே விட்டிருக்கிறதுபோல் தெரிகிறது.

– இவ்வாறு நேற்றுக் காட்டமாகக் கருத்து வெளியிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன்.

நேற்று இரவு நடந்ததொலைக் காட்சி நேர்காணல் ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த நேர்காணல் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலர் பிரிவைத் தரம் உயர்த்துவது தொடர்பான விவகாரம் குறித்து சுமந்திரன் எம்.பியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

கல்முனை உபபிரதேசசெயலகத்தைத் தரமுயர்த்தக் கோரி நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் பின்னால் பல விடயங்கள் மறைந்துள்ளன. ஒருவகையில் அந்தப் போராட்டம் நடந்ததும் நல்லதுதான். அதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை அடையாளம் காண்பதற்கு அது உதவியிருக்கின்றது.

அங்கு சென்ற எங்களுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதன் பின்னணியில் சிலர் உள்ளனர். அது இப்போது எங்களுக்குத் தெரிய வந்திருகின்றது. அங்குள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், எதிர்ப்பு வெளியிடப் பட்ட சம்பவத்துக்கும் தமக்கும் தொடர்பில்லை எனப்பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் மன்னிப்பும் கோரி யிருக்கிறார்கள். இந்தச் சம்பவத் தின் பின்னால் சில உள்ளூர் அரசியல்வாதிகள் இருந்தனர் என்பது அங்கிருந்த எல்லோருக் குமே தெரியும். தாம் மக்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்டு விட்டோம் என்பதை நன்றாக உணர்ந்துள்ள அவர்கள் இப்படி யான விடயங்களைத் தங்களின் அரசியல் தேவைக்காகப் பயன் படுத்துகிறார்கள்.

இந்தச் சம்பவத்தின் பின்னால் மஹிந்த தரப்பினர் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை . அவ் வாறு அவர்கள் செய்தார்களா என்பதும் தெரியவில்லை .

அமைச்சர் வஜிர அபேவர்த்தன் வழங்கிய உறுதிமொழியைப் போராட்டக்காரர்களுக்குத் தெரி யப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் என் னிடம் கேட்டுக்கொண்டார். அமைச் சர்களான மனோ கணேசன், தயா கமகே ஆகியோரும் அங்கு வருகின்றனர் என அவர் குறிப் பிட்டார். இதனையடுத்து நாங்கள் அங்கு சென்றோம். போராட்டக் காரர்களுடன் பேசினோம். அமைச் சர்வஜிர அபேவர்த்தனவின் கடி தத்தை நான் வாசித்துக் காட்டி னேன். அதில் பிரதேச செயலகத் தைத்தரம் உயர்த்த மூன்று மாத அவகாசம் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தமையே அவர்களுக் குப் பிரச்சினையாக இருந்தது. அதற்கு அவர்கள் எதிர்ப்புவெளி யிட்டனர். அவ்வாறு அவகாசம் வழங்கமுடியாது என்றனர். அமைச்சர் மனோ கணேசனும் பேசிப் பார்த்தார். அமைச்சர் தயா கமகே பேசியபோது எதிர்ப்பு இன் னும் வலுத்தது. இதனையடுத்து நாங்கள் அங்கிருந்து புறப்பட் டோம். அப்போது எமக்கு எதிராக அங்கிருந்த சிலர் கூச்சலிட்டனர். எம்மைத் தாக்குவதற்கும் முயற் சிக்கப்பட்டது. ஆயினும் தாக்குத லுக்கு இலக்காகாமல் நாங்கள் அங்கிருந்து வெளியேறினோம்.

அடுத்த நாள்ஞானசார தேரர் போராட்டம் நடந்த இடத்துக்குச் சென்றார். அவரும் அமைச்சர் வஜிர அபேவர்த்தன வழங்கிய கடிதத்தையே அங்கு எடுத்துச் சென்றார். நாங்களும் முதல் நாள் அதே கடிதத்தைத்தான் கொண்டு சென்றோம். ஆயினும் தான் ஒரு மாதத்துக்குள் இதற்குத் தீர்வைப் பெற்றுத் தருவேன் என்று ஞானசார தேரர் கூறிப் போராட்டத்தை முடித்துவைத்தார். இந்தச் சம்பவத்தின் பின்னணி  என்ன என்பது இதன் மூலம் தெரிகிறது.

இந்த நெருக்கடியான நேரத் தில் முஸ்லிம்களுக்கு எதிராக மும்முரமாகச் செயற்பட்டஞானசார தேரர் பொதுமன்னிப்பின் அடிப் படையில் விடுதலை செய்யப்பட்ட டார் என்றால் அதன் பின்னால் யார் உள்ளார்கள் என்பது புலனா கின்றது. அவரது விடுதலை கடி நாயை அவிழ்த்துவிட்ட செய லுக்கு ஒப்பானது.

கல்முனைப்போராட்ட விடயத் தில் அரசும் நடக்கட்டும் என்ற மனநிலையுடனேயே செயற்பட் டிருக்கின்றதுபோல் தெரிகிறது.

கருணா, வியாழேந்திரன் போன்றவர்கள் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டு விட்டனர். அது அவர்களுக்கும் புரிந்துவிட்டது. இதனால் இப்படியான போராட்டங் கள் நடக்கும்போது பாய்ந்து விழுந்து ஓடிப்போய் ஒட்டிக்கொள் வதே அவர்களது செயற்பாடாக இருக்கிறது. அவர்களுக்கு வேறு வழியில்லை – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்