சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்தார் சுரேன் ராகவன்!

வடமாகாணத்தின் பிரதேச சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ் நாவலர் மண்டபத்தில் இன்று(திங்கட்கிழமை) காலை இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின்கீழ் செயற்பட்டுவரும் மக்கள் பிரதிநிதிகள் தமது பிரதேச மக்களின் பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தி தொடர்பாக அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டுமென சுரேன் ராகவன் இதன்போது கோரியுள்ளார்.

அதை நோக்காக கொண்டு முன்வைக்கப்படும் திட்டங்களுக்கு பிரதேச சபைகளின் ஊடாக உதவி புரிவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் பிரதேச சபைகள் மட்டத்திலும் சமூக மட்டத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்