கடுபேற்றிய களவாணி-2, ஆடி போய் ஆவணி வந்தாலும் செல்ப் எடுக்காத நிலை!

களவாணி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியடைந்த் சிறு பட்ஜெட் படங்களில் ஒன்று. இப்படம் பலருக்கும் ஒரு ட்ரெண்ட் செட்டர்-ஆக இருந்தது.

அட, புதுமுகங்களை வைத்து கிராமத்து மக்களை வைத்து இவ்வளவு யதார்த்தமாக ஒரு படமெடுத்து அதில் வெற்றியும் பெற முடியுமா? என்று பலரையும் யோசிக்க வைத்தது.

இப்படி இந்த படத்தின் மூலம் விமல், ஓவியா, சூரி இயக்குனர் சற்குணம் வரை பலரும் சினிமா உலகத்தில் பிரகாசமாக தெரிய ஆரம்பித்தனர்.

ஆனால், களவாணி என்ற டைட்டிலை மட்டும் வைத்துக்கொண்டு இரண்டாம் பாகத்தை தொடங்கிய சற்குணம் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் அல்லவா..!

ஆம், படத்தின் முதல் பாதி எல்லாம் எங்கு படம் போகிறது, எதற்கு இந்த காட்சிகள், ஏன் இவர்கள் வருகிறார்கள், போகிறார்கள் என்ற நிலை தான்.

அதிலும் ஒரு காட்சிக்கு காட்சி எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் கதை நகர்கின்றது, இதற்கு ராஜமுகமது எடிட்டிங் காரணமா, இல்லை இது தான் படம், வெட்டி, ஒட்டி கொடுங்கள் என்று கேட்டார்களா? என்று தெரியவில்லை.

தேர்தல் என்ற ஒரு விஷயம் வந்த பிறகு தான் படத்தின் கதையே ஆரம்பிக்கின்றது, சரி இனி தான் படம் என்று நிமிர்ந்து உட்கார்ந்தார், விமல் சம்மந்தமே இல்லாமல் ஓவியாவுடன் டூயட் பாட போகிறார்.

ஓவியா முதல் பாகத்தில் மேக்கப் இல்லாமல் அத்தனை அழகாக இருந்தவர், இதில் மேக்கப் போட்டும் அதை ஈடுக்கொடுக்கமுடியவில்லை.

கடைசி அரை மணி நேரம் தான் நாம் எதிர்ப்பார்த்த களவாணி வருகின்றது, அதுவரை பொறுமை காக்க தைரியம் இருந்தால் இதற்கு விசிட் அடிக்கலாம்.

அப்றம் படத்தின் பெரிய ஆறுதல் காலம் கடந்தும் கவரும் இளவரசு, சரண்யா ஆக்டிங் தான்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்