யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி – ஆளுநர் சந்திப்பு

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (08) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச்செல்லும் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்கள் கௌரவ ஆளுநர் அவர்களை சந்தித்து தனது ஓய்வு குறித்து தெரிவித்துக்கொண்டார்.

போருக்கு பின்னரான காலப்பகுதியில் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் பிரதானியாக பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான செயற்பாடுகளில் திறமையாக செயற்பட்டமையை பாராட்டிய கௌரவ ஆளுநர் அவர்கள் , இந்த சேவையை ஆற்றியமைக்கு தனது நன்றியினையும் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை மக்களுடன் நட்புறவுடன் சேவையாற்றிய கட்டளைத் தளபதியை யாழ் மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்;று தெரிவித்த ஆளுநர் அவர்கள் , ஓய்வு பெற்றாலும் செய்யக்கூடிய அனைத்து பணிகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பினை நினைவு கூரும் வகையில் ஆளுநர் அவர்கள் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதிக்கு நினைவுப்பரிசினை வழங்கினார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்