ஆடு நனைகிறது என்று அழுகிறதாம் ஓணாய்!

கீழே காணப்படுகிற பந்தி காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரன் ஒவ்வொரு நாளும் எழுதுகிற ”இனி இது ஒரு இரகசியம் அல்ல ”என்ற கிசு கிசு பகுதியில் இன்று வெளிவந்துள்ளது.

ஆடு நனைகிறது என்று ஓணாய் அழுத கணக்காக திருகோணமலை தமிழ்  அரசுக் கட்சி பற்றியும்குறிப்பாக குகதாசனின்  செயற்பாடு பற்றியும் கேவலமாக வித்தியாதரன் விமர்ச்சித்துள்ளார்.

சம்பந்தன் ஐயாவை விடத் தனக்கு திருகோணமலை தமிழ் அரசுக் கட்சியில் அதிக அக்கறையுண்டு காட்டிக் கொள்வது மட்டுமல்ல அவருக்கு அரசியல் பாடம் எடுக்கிறார் வித்தியாதரன்!

அண்மைக்காலமாக வித்தியாதரன் குகதாசனை கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒருவர் என விமர்ச்சித்து வந்தார். சரிஅப்டிச் எழுதுவதால் அவருக்கு அற்ப மகிழ்ச்சி என்றால் அதனை நான் கெடுக்க விரும்பவில்லை. அற்பர்களுக்கு பவுசு வந்தால் அர்த்தராத்திரியில் குடிபிடிக்கிறார் என்று எடுத்துக் கொண்டோம்.

ஆனால் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்கும் குக்கல் போல “சம்பந்தனின் செம்புதூக்கியாகத் திகழும்  கனடா‘ இறக்குமதி புகழ் – குகதாசன் எனக் கீழ்த்தரமாக விமர்ச்சித்துள்ளார்.

இந்தப் பாணியில் எங்களாலும் எழுத முடியும்  “கொழும்புக்குப் போகும் போதெல்லாம் மகிந்தா இராசபக்சவைச் சந்தித்து குசலம் விசாரிக்கும் அவர் கொடுக்கும் தேநீரைப் பருகுவதில் புளகாங்கிதம் அடையும் வித்தியாதரன் மகிந்தாவின் கூசாதூக்கி” என்று எழுதுவதற்கு எமக்கும் அதிக நேரம் எடுக்காது!

இதே மகிந்த இராசபக்சாதான் வித்தியாதரனை வெள்ளைவானில் கடத்தி இரண்டு மாதம் தடுப்புக் காவலில் வைத்திருந்தார் என்பது ஒன்று இரகசியமல்ல.

கடந்த 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சனநாயகப் போராளிகள் என்ற கட்சியைத் தொடங்கி அந்தக் கட்சிக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு வேட்பாளர் தேவை என்ற கோரிக்கையை வித்தியாதரன் ததேகூ இடம் முன்வைத்தார். அது மறுக்கப்பட்ட போது சனநாயகப் போராளிகள் கட்சியைத் தொடங்கி தானே அதன் முதன்மை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டார். முடிவு? தெரிந்ததே!  வெறுமனே 1973 வாக்குகளை மட்டும் பெற்று மனிதர் கட்டுக்காசை இழந்தார்.

இப்படியான ஒரு வெற்று வேட்டு மனிதர்தான் மற்றவர்களுக்கு அரசியல் பாடம் எடுக்கிறார். அதுவும் சம்பந்தன் ஐயாவுக்கு பாடம் எடுக்கிறார்!

இதைத்தான் சொல்வது நண்டு கொழுத்தால் புத்துக்குள் இருக்காதாம்.

சொந்த ஏடு ஒன்று கையில் இருப்பதால் கண்டதையெல்லாம் எழுதி குகதாசன் போன்ற ஒருவர் மீது சேறு பூச நினைத்தால் அது நடக்காது.

குகதாசன் திருகோணமலைக்கு இறக்குமதி செய்யப்படவில்லை. திருகோணமலை அவருக்குப் புதிதல்ல. அவர் பிறந்ததே திரியாய் என்ற கிராமத்தில். அங்கே அவரது சொந்த பந்தங்கள் வாழ்கின்றனர். நிலம்புலம் இருக்கின்றன.

கனடாவில்  3 கல்விச் சபைகளில் ஆசிரியராகப் பணியாற்றி மாதம்  5,000 டொலர்களை (இலங்கை நாணயத்தில் உரூபா 675,000) சம்பளமாகப் பெற்றவர். அதனை உதறிவிட்டுத்தான் நாடு திரும்பியவர். அவர் விரும்பியிருந்தால் அவரது பணியில் மேலும் 15 ஆண்டுகளாக பணி செய்து ஓய்வு பெற்றிருக்க முடியும்! வேறு யாராலும் இப்படியான தியாகத்தை செய்ய முடியுமாதமிழ் அரசுக் கட்சியில் மூத்தோர்களும் இருக்கிறார்கள். இளையோரும் இருக்கிறார்கள். மூத்தோரது அறிவும் அனுபவுமும் இளையோரது துடிப்பும்  வினைத்திறனும் தேவை. இரண்டும் தேவை.

தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணத் தலைமையகம் வயோதிபர் மடம்” என்று எள்ளி நகையாடும் வித்தியாதரனுக்கு மட்டும் இளமை என்ன ஊஞ்சல் ஆடுகிறதா? தனது 60 ஆண்டு நிறைவு நாளை பிரமாதமாக சென்ற வாரம் கொண்டாடியிருக்கிறாரே?

யதார்த்தம் என்ன வென்றால் குகதாசன் வித்தியாதரனைவிட அகவையில் இளையவர். அப்படியான ஒருவர் தமிழ் அரசுக் கட்சியில் முழுநேர செயற்பாட்டளாராக உழைப்பது கட்சிக்கு மட்டுமல்ல  நாட்டுக்கும் நல்லது.

இருந்தும் வித்தியாதரன் போன்ற அற்பர்களால் அதனை வரவேற்க முடியாது இருக்கிறது!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நிலைமை சொல்லிக் கொள்ளக் கூடிய கட்டத்தில் இல்லைப் போலும். அக்கட்சியோடு நீண்டகாலம் செயற்பட்ட திருகோணமலைத் தொண்டர்கள் பலரும் வெறுப்பின் உச்சியில் இருக்கின்றனர்.

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவராகவும்தமிழ்க் கூட்டமைப்பின் ஏகோபித்த தலைவராகவும் விளங்கும் சம்பந்தன் தமது மாவட்டமான திருகோணமலை குறித்து உரிய கவனிப்பு – சிரத்தை – எடுக்கவில்லை
என்பது கட்சியினர் பலரின் ஆதங்கம்.

எம்.பியான சம்பந்தனும்அவரின் தேசியப் பட்டியல் எம்.பியாக நியமிக்கப்பட்ட துரைரட்ணசிங்கமும். இவர்கள் தங்கள் மாவட்டடத் தின் கொதி நிலையைக் கருத்தில் கொண்டு துடிப்பாகச் செயற்பட்டிருக்க வேண்டும். தாமும் அதைச் செய்யாமல்ஓரளவுக்குக் கொதிப்புடன் செயற்பட்ட கட்சியின் மாவட்டக் கிளையையும் செயற்படாத தங்களின் ஆள்களைப் பதவிகளுக்கு நிறுத்தி பங்கம் செய்து விட்டனர் என்று குறைபட்டுக்
கொண்டனர் கட்சியின் திருகோணமலைத் தொண்டர்கள் பலர்.

தம்மைக் கனடாவுக்கு அழைத்து கெளரவித்த குகதாசன் என்பவரை அங்கிருந்து கூட்டிவந்துதிருகோணமலை தமிழரசுக் கட்சி மாவட்டக்கிளையை அவரது தரப்பிடம் ஒப்படைத்திருக்கின்றார் சம்பந்தன். இதற்காகஏற்கனவே முனைப்பாகச் செயற்பட்ட கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் நீண்ட காலத் தொண்டர்கள்செயற்பாட்டாளர்கள் தூக்கி அகற்றப்பட்டு ஓரங்கட்டப்பட்டிருக்கின்றனர்.

திருகோணமலை நகரத்தில் ஒரு வீடு மாதம் அறுபதாயிரம் ரூபாவுக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான வாடகைப் பணம் கட்சி வட்டாரங்கள் மூலமே செலுத்தப்படுகின்றன. ஆனால் கட்சியின் பெயர்ப்பலகையோ அலுவலகக் குறியீடோ எதுவும் அந்த வீட்டில் இல்லை. சம்பந்தனின் செம்புதூக்கியாகத் திகழும்  கனடா‘ இறக்குமதி புகழ் – குகதாசன் அந்த வீட்டில்தான் வாசம். வயதான சம்பந்தன் ஐயா  தமக்குப் பின்னர் திருகோணமலையில் தமிழரசுக் கட்சியை அநாதரவாகத்தான் விட்டுச்செல்லப் போகின்றார். அவர் யாரையும் சரியாக அங்கு உருவாக்கிவிடவில்லை. அவர் கொண்டு வந்திருக்கும் குகதாசனும் மக்கள் ஆதரவு பெற முடியாத டம்மி வேட்டுத்தான்!” – என்று திருகோண மலையில் பழுத்த தமிழரசுக் கட்சித் தொண்டர் ஒருவர் கொதிப் புடன் தெரிவித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வதற்கு பல லட்சம் ரூபா கூட்டமைப்பு ஊடாகப் பட்டுவாடா செய்தமை ஊரறிந்த இரகசியம்.

அது வாசகர்களாகிய உங்களுக் கும் தெரிந்திருக்கும். மாவட்டம் தோறும் மில்லியன் கணக்கில் விநியோகிக்கப்பட்ட அந்த நிதியில் ஒரு பகுதி மைத்திரிக்கான பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட எஞ்சிய தொகை மாவட்ட மட்டப் பிரகிருதிகளினால் சுவாஹா‘ செய்யப்பட்டது. ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் அது சுவாஹா‘ ஆகாமல் தப்பிப் பிழைத்தது.

இதுவரை காலமும்திருகோணமலை மாவட்டக் கிளையின் பொறுப்பாளராக இருந்த மாவட்டத் தலைவர் சி.தண்டாயுதபாணிசெயலாளர் கனகசிங்கம்பொருளாளர் சத்தியசீலராஜா ஆகிய மூவரும் ஹட்டன் நனல் வங்கியில் தனிப்பட்ட வங்கிக் கணக்கு ஒன்றைப கூட்டாகத் திறந்து சேமிப்புக் கணக்கிலும்ரொக்க வைப்பிலும் அந்தப் பணத்தை பாதுகாப்பாக மிச்சம் பிடித்து வைத்தனர். அது பற்றி சம்பந்தனிடமும் கட்சியின் பிற தலைவர்களி டமும் அவ்வப்போது தகவல் தெரிவித்தும் வந்தனர்.

அந்த நிதியை வீணாகச் செலவு செய்யாமல் பாதுகாத்து வந்தனர். இப்போது அவர்களிடமிருந்து மாவட்ட கட்சி நிர்வாகத்தை பிடுங்கி குகதாசன் அண்ட் கம்பனியிடம்‘ கையளித்து விட்டார் சம்பந்தன். இதையடுத்து தங்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்த – கட்சியின் நிதி என்று கூறப்படுகின்ற – சுமார் 18 லட்சம் கையளித்து விட்டார் சம்பந்தன்.

இதையடுத்து தங்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்த – கட்சியின் நிதி என்று கூறப்படுகின்ற – சுமார் 18 லட்சம் ரூபாவை குகதாசன் அண்ட் கோவின் தனிப்பட்ட கணக்கிற்கு மாற்றிக் கொடுத்துள்ளனர் தண்
டாயுதபாணிகனகசிங்கம்சத்தியசீலராஜா ஆகியோர்.குகதாசன் திருகோணமலை நகரத்தில் தங்கியிருக்கும் வீட்டுக்கான மாத வாடகை என்று தொடங்கிஇதுவரை காலமும் வைப்பிலிருந்த 18 லட்சம் ரூபா
வைக் கரைத்து முடிப்பதற்கான கைங்கரியம் கனகச்சிதமாக ஒப்பேறத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றதது.  செம்பு கட்சியின் உத்தியோகபூர்வ கணக்கிற்குள் இந்தப் பணம் வராததால்அதைக் கேட்டுக் கேள்வியின்றிசெலவழித்துத் தொலைத்தாலும் அது பற்றிய கணக்காய்வுக்கோ விசாரணைக்கோ  இடமில்லை. பிறகென்னகுகதாசன் அணிக்குக் கொண்டாட்டம் என்கின்றனர் திருகோணமலைத் தமிழரசுத் தொண்டர்கள்.

கட்சியோடு நின்றவர்களையும்கட்சித் தொண்டர்களையும் தொலைத்து விட்டு திருகோணமலையில் தமிழரசுக் கட்சியை நட்டாற்றில் விடப்போகின்றார் சம்பந்தன் எனப் பொருமுகிறார் உள்ளூர் கட்சி அனுதாபி ஒருவர்…!

தமிழரின் தேசிய இனப்பிரச்சினை விடயத்திலேயே தமிழர்களை நட்டாற்றில் விட்டுவிடுவோமோ என்ற பதகளிப்பில் இருக்கும் சம்பந்தனுக்கு திருகோணமலையில் தமிழரசுக் கட்சியை நட்டாற்றில் விடுவது குறித்துக் கவலைப்பட நேரம் எங்கே இருக்கப் போகின்றது…?
– மின்னல் –

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்