மட்டக்களப்பில் எட்டு வேட்பாளர்களின் கூட்டு முயற்சியால தான் மூன்றுபேர் வெற்றிபெற்றனர் இதற்கு விஞ்ஞான விளக்கம் தேவையில்லை

பட்டிருப்பு தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி செயலகம் எந்த இடத்திலும் திறக்கப்படவில்லை களுவாஞ்சிகுடியில் கடந்த 07/07/2019, திறக்கப்பட்ட அலுவலகம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர ஞா.ஶ்ரீநேசனின் அலுவலகமே இதை கட்சிகாரியாலயம் என சித்தரிப்பது தவறு என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் குறிப்பிட்டார்.
களுவாஞ்சிகுடியில் ஶ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினரின் காரியாலயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து கருத்து கூறுகையில்

களுவாஞ்சிகுடியில் பாராளுமன்ற உறுப்பினர் அவரின் சுய விருப்புக்கு அமைவாக தமது காரியாலயத்தை தாமே சென்று அவருக்கு விரும்பிய சிலரை அழைத்து திறந்துவைத்தார் இதுதொடர்பாக இலங்கை தமிழரசு கட்சி பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்களுடன் தொடர்பு கொண்டு வினாவிய போது இது பாராளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட அலுவலகம் இதற்கும் தமிழரசு கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை அப்படி தொகுதிக்கிளை அலுவலகம் திறப்பதானால் பொதுச்செயலாளராகிய நானே நேரில் சென்று திறந்திருப்பேன் இதைவிடவும் பட்டிருப்பு தொகுதி தலைவர் செயலாளர் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பொரதீவுபற்று,மண்முனை தென்மேற்கு பிரதேச கிளை உறுப்பினர்கள் எவருக்கும் தெரியாமல் இவ்வாறான செயலகம் திறக்கப்பமாட்டாது என கூறினார்,
பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் என்ற முறையில் எனக்கும் இந்த செயலகம் திறப்பு சம்மந்தமாக எதுவும் தெரியாது.

ஆனால் எந்த ஒருபாராளுமன்ற உறுப்பினரும் அந்த பிரதேச தொகுதி மக்களின் நலன் சார்ந்து எத்தனை அலுவலகங்களையும் பாராளுமன்ற உறுப்பினரின் கடமைகளை இலகுபடுத்தும் நோக்கில் எங்கு வேண்டுமானாலும் காரியாலயங்கள் இநங்குவதற்கு உரிமை உண்டு அதில் எந்த ஆட்சேபனைகளும் இல்லை.

ஒரு கட்சி அலுவலகம் பாராளுமன்ற உறுப்பினர் திறப்பதாயின் அந்த கட்சி பொதுச்செயலாளர் அந்த தொகுதி நிரவாகத்தினருக்கு தெரியாமல் திறக்க முடியாது இலங்கை தமிழரசு கட்சி என்பது பாரம்பரியமாக யாப்பின் அடிப்படையில் செயல்பட்டு வரும் ஒரு கட்சியாகும் எவரும் யாப்பை மீறி செயல்பட முடியாது என்பதே உண்மை.

பட்டிருப்பு தொகுதியில் கடந்த 2004,2010, காலப்பகுதியில் தொடர்ந்து இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவான போதும் கடந்த 2015,ம் ஆண்டு பட்டிருப்பு தொகுதியில் இருந்து எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் தெரிவாகவில்லை இதற்கு விஞ்ஞான ரீதியான விளக்கம் தேவையில்லை விகிதாசார்தேர்தலில் முதலில் கட்சிக்கும் அதன்பின் விருப்பு வாக்குகளையும் பொறுத்தே தெரிவுகள் இடம்பெறும் இதன் அடிப்படையில் கடந்த இக்கட்டான உயிர் அச்சுறுத்தல் காலத்தில் 2010,ம் ஆண்டு எவருமே பயத்தால் தேர்தலில் போட்டியிட வரவில்லை நாமே அதற்கு முகம் கொடுத்து உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பபை வெற்றிபெற வைத்தோம் அப்போது மக்களும் பல அச்சுறுத்தல் காரணமாக வாக்களிப்பில் தயக்கம் காட்டினர் அதனால் அறுபத்தி ஐயாயிரம் வாக்குகள் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்தது மூன்று உறுப்பினர்கள் தெரிவானோம 2010,ம் ஆண்டு தொடக்கம் 2015,வரை மகிந்த அரசின் கெடுபிடிகளை தாங்கி மட்டக்களப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மிகுந்த ஆதரவை தேடிக்கொடுத்தோம் அதன் பின்பு ஜனாதிபதி தேர்தல் 2015,ஜனவரி இடம் பெற்ற பின்பே மட்டக்களப்பு வடகிழக்கு எங்கும் உயிர் அச்சுறுத்தல் நிலை இல்லாமல் போனது அதன் காரணமாகவே 2015,ல் பல வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டினர் அச்சுறுத்தல் காலத்தில் ஓடி ஒழித்து ஒதுங்கியவர்கள் எல்லாம் வேட்பாளர்களுக்கு விண்ணப்பித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு வேட்பாளர்கள்மட்டுமே ஒரு கட்சியில் போட்டியிட முடியும் அதில் மூன்றுபேர் வெற்றிபெற்றனர் ஐந்து பேர் வெற்றியடையவில்லை அந்த ஐந்து பேரும் வெற்றியடையாவிட்டாலும் அவர்களின் பங்களிப்பும் முழுமையாக கட்சிக்கு வாக்கெடுத்து கொடுத்ததன் காரணமாகவே மூன்று பேர் தெரிவானார்கள்,
உதாரணமாக என்னை எடுத்துக்கொண்டால் கடந்த 2004, தேர்தலில் எனக்கு 36556,வாக்குகள் பெற்று வெற்றிபெற்றேன்,
இரண்டாம் தடவை 2010,ல் 16504,வாக்குகள் மட்டுமே எனக்கு கிடைத்தது நான் வெற்றிபெற்றேன்,ஆனால் 2015, தேர்தலில் எனக்கு 22689,வாக்குகளை பெற்றும் நான் தெரிவாகவில்லை எனது பூரண பங்களிப்பு கட்சி வெற்றிக்கு இருந்தது இதுபோன்றே ஏனய தோல்வி பெற்ற சக உறுப்பினர்களும் கட்சிக்கு கணிசமான வாக்குகளை பெற்றுக்கொடுத்தோம்.
எட்டு வேட்பாளர்களின் கூட்டுமுயற்சியில்தான் மூன்று உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவானார்கள் என்பதை வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் உணரவேண்டும்.
என்னைப்பொறுத்தவை எந்த தேர்தலிலும் நான் எனது இலக்கத்தை முதன்மை படுத்தி விருப்பு வாக்கு கேட்கவில்லை என்னைவிட தமிழ்தேசிய கட்சி வெற்றிபெற வேண்டும் என்றே பிரசாரங்களை மேற்கொண்டேன் அதனால் கட்சி வெற்றிபெற்றது அதுவே எனக்கு திருப்தியளித்தது.

எனவே உண்மைகள் உறங்குவதுல்லை ஒருகட்சி உருப்படியாக ஒற்றுமையாக தொடர்ந்தும் செயல்பட வேண்டுமானால் கட்சியின் உறுப்பினர்களை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை அதே கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தொண்டர்கள் பதவிநிலை உறுப்பினர்கள் தவறாக விஞ்ஞான விளக்கங்களை கொடுப்பதை தவிர்த்து எல்லோரையும் உள்வாங்கி பழைய வரலாறுகளை அறிந்து செயலாற்றுவதே தமிழரசு கட்சி உறுப்பினர்களுக்கு அழகு,கட்சிகூட்டங்களில் பேசவேண்டிய விடயங்களை பொது வெளிகளில் பேசுவது மற்றவர்களையும் பொதுவெளியில் பேசத்தூண்டும் என்பதை புரியவேண்டும்.எனவும் மேலும் கூறினார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்