பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான மனுக்களை விசாரிக்க குழு நியமனம்

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் குறித்து பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்ய ஏழு பேர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில் குறித்த நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

புவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, எல் டீ பீ தெஹிதெனிய மற்றும் முருது பெர்ணான்டோ ஆகியோர் இந்த குழுக்களின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நீதிபதிகள் குழு முன்னிலையில் ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் எதிர்வரும் 12ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்