களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்வெட்டு

களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை வாத்துவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு கட்டுகுருந்த மற்றும் நாகொட உள்ளிட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

களுத்துறை அல்விஸ் பிராந்திய நீர்த்தேக்கத்தில் இடம்பெறும் அவசர திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் நாளை மறுதினம் காலை 9 மணிவரை 24 மணித்தியாலங்களுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்படும் கொழும்பு நகரின் அபிவிருத்தி திட்டம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்