ஹேமசிறி, பூஜித்திற்கு பிணை வழங்கப்படுமா?

பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்து அறிவிக்கப்படவுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போதே இந்த விடயம் தொடர்பாக அறிவிக்கப்படவுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே அறிந்திருந்தும் கடமை தவறியக் குற்றச்சாட்டின் கீழ், அவர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியிருந்தார்.

இதன் அடிப்படையில் அவர்கள் இருவரும் கடந்த 3ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்