அடுத்த ஜனாதிபதியாக சஜித்தையே மக்கள் விரும்புகின்றனர்: கயந்த

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக அமைச்சர் சஜித் பிரேமதாஸவே வர வேண்டுமென மக்கள் விரும்புவதாக காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

சீதாவகப்புர பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளதாவது,

“இன, மத மற்றும் கட்சி வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் சேவையாற்றக்கூடியவர்கள் நாட்டுக்குள் உள்ளனர்.

அதாவது பிரபல்யத்துக்காக சேவையாற்றாமல் மக்களின் தேவையை அறிந்து அதற்காக சேவையாற்றும் சஜித் பிரேமதாஸவை அனைவரும் விரும்புகின்றனர்.

அந்தவகையில் நாட்டை நிர்வகிக்ககூடிய சிறந்த தலைவர் யாரென சிந்தித்து பார்த்தால் சஜித்தையே மக்கள் அனைவரும் குறிப்பிடுவார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது

எனவே அவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளமை வரவேற்கத்தக்கதோர் விடயமாகும்” என கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்