ஏறாவூரில் குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு ஏறாவூரில் கைக்குண்டு மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்டது.

ஏறாவூர் முகாந்திரம் வீதியில் உள்ள வீடொன்றின் கூரையின் நீர்தாங்கிஒன்றினுள் இருந்து இவை மீட்கப்பட்டுள்ளன.

கிடைத்ததகவலுக்கமைய இவை சேதனைசெய்யப்பட்டு மீட்கப்பட்டுள்ளன விசேட அதிரடிப்படையினர், இரானுவத்தினர் மற்றும் பொலிசார் சேதனைசெய்து இவற்றை கைப்பற்றியுள்ளனர்.

கூரையின் நீர்த்தாங்கியில் இருந்து 2கைக்குண்டு, மற்றும் 63 தோட்டாக்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட கைக்குண்டை ஏறாவூர் புன்னக்குடா பகுதியில் விசேடஅதிரடிப்படையினரால் செயலிழக்கவைக்கப்பட்டது.

இது தொடர்பாக ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்