‘உயிர்கொல்லி கம்பங்கள் தேவையில்லை’ – யாழில் முஸ்லிம்கள் போராட்டம்!

யாழ்.மாநகர சபையினால் அமைக்கப்படும் 5G தொழில்நுட்ப கம்பங்களை அகற்றுமாறு கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் ஐந்துசந்தி பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஒன்றுகூடிய முஸ்லிம் மக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மின் விளக்குகளை பொருத்துவதற்காகவே கம்பங்களை நாட்டுவதாக பொய்கூறிய யாழ்.மாநகரசபை, கதிா்வீச்சு கூடிய 5G தொழில்நுட்ப கம்பங்களை நாட்டுவதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் குற்றஞ்சாட்டினர்.

மக்களை கொல்லும் உயிா்கொல்லி கம்பங்கள் எமக்கு தேவையில்லை. அதனை அகற்றுங்கள் எனக்கோாியதுடன், மாநகர சபைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்