வனிதாவின் முகத்திரையை கிழித்த பிரபல நடிகை! செய்த மோசமான வேலை யை போட்டுடைத்த பிரபலம்

பிக்பாஸ் வீட்டில் தற்போது வில்லியாக ரசிகர்களுக்கு தெரிபவர் வனிதா. சக போட்டியாளர்கள் மீதான திமிர்த்தனமான அவரின் அடக்குமுறை ரசிகர்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

அவர் மீது மீம்ஸ்களும், கடும் விமர்சனங்களும் எழுந்து வருகிறது. வீட்டிற்குள் வயதில் மூத்தவர் என்றும் கூட பாராமல் திமிர்த்தனமாக பேசியதை பிக்பாஸ் எபிசோடிலும் காட்டினார்கள்.

இந்நிலையில் முதல் எவிக்‌ஷனால் அவ்வீட்டிலிருந்து வெளியேறிய பாத்திமா பாபு ஒரு நேர்காணலில் வனிதா பற்றி பேசியுள்ளார். வனிதா முதலில் என் மீது அன்பு வைத்திருந்தார். ஆதரவாக நினைத்தார். என்னிடம் தன் வாழ்க்கையை பற்றி பேசினார். நிறைய விசயங்கள் இருக்கிறது. ஆனால் முழுமையாக என்னால் கேட்க முடியவில்லை. நான் ஆலோசனை கொடுக்க முயன்றேன். ஆனால் அதை நோக்கி போகாவில்லை.

அவர் சொல்வதை யார் கேட்கிறார்களா அவர் தன்னோடு சேர்த்து குழுவாக்கிகொள்கிறார். தான் செய்வதெல்லாம் சரி என நினைத்துக்கொண்டிருக்கிறார்.

நாமினேசனுக்கு நடந்துகொண்டிருக்கிறது. 7 பேர் போயிருக்கிறார்கள். அப்போதே அவர் கருத்துகணிப்பு போல மற்றவர்களை தூண்டும் விதமாக பாத்திமா, மீரா, மதுமிதா ஆகியோர் நாமினேட் ஆவார்கள் என கூறியுள்ளார்.

பிக்பாஸ் ரூல்ஸ் படி நாமினேசன் பற்றி வெளியில் பேசக்கூடாது. இதை அவர் மீறியுள்ளார். நான் பிக்பாஸிடம் கன்ஃபெசன் ரூமில் இதை புகாராக கூறிவிட்டேன். தண்டனை கொடுங்கள் அல்லது அறிவுரை கூறுங்கள் என கூறீவிட்டேன். வனிதா செய்தது மிகப்பெரிய தவறு. மற்றவர்களை தவறாக வழி நடத்துகிறார் என கூறியுள்ளார்.

அதே நான் வெளிவரும் முன் அபிராமியிடம் சாக்‌ஷியை யார் நாமினேட் செய்தார்கள் என கண்டுபிடித்தீர்களா என கேட்டு மறுபடியும் அதே தவறை செய்து வருகிறார்.

அதே போல கமல் அவரிடம் செம்மை என மை வைத்து 4 வார்த்தைகள் சொல்லி சூசகமாக வனிதா செய்வதை சுட்டிக்காட்டினார். ஆனால் அவள் இதை புரிந்துகொள்ளாமல் தன் அப்பா நடித்த நாட்டாமை படத்தை பற்றி குறிப்பிட்டதாக நினைத்து தான் செய்த தவறை பற்றி நினைக்காமல் பெருமையாக நினைத்து என்னிடமே சொன்னாள்.

அவருக்கு எது கேலி செய்யக்கூடிய சிரிப்பு, எது தவறு, எது செய்யக்கூடாது என தெரியவில்லை. சரியான புரிதல் இல்லை. வனிதா தன்னை மாற்றிக்கொள்ளாமல் வாழ்க்கையில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. ஆண்டவனே வந்தாலும் அவரை காப்பாற்ற முடியாது. முரட்டு தனமான முட்டாள் பெண் என பல உண்மைகளை பாத்திமா பேசியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்