யாழ்ப்பாணத்தில் ஐந்து சந்தி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள SMART POLL எதிர்ப்பு

பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில்  முஸ்லிம் மக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த போராட்டம் செவ்வாய்க்கிழமை(9)  காலை   யாழ். மாநகரசபையினால் ஐந்து சந்திப்பகுதியில் அமைக்கப்படும் கம்பங்களை அகற்றுமாறு கோாி கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்
யாழ். மாநகரசபை மின்கம்பங்களை பொருத்துவதாக பொய்யுரைத்து கதிா்வீச்சு கூடிய 5G தொழிநுட்ப கம்பங்களை நாட்டுகின்றது.
மனித உயிா்கொல்லியான அந்த கம்பங்கள் எமக்கு தேவையில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிரினங்களுக்கு ஆபத்தான 5G கோபுரத்தை எதிர்ப்போம், வேண்டாம் வேண்டாம் 5G டவர் வேண்டாம் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாக்கியிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்