ஓமந்தை வண்ணான்குளம் பொற்கோயில் செல்லும் இந்துக்களுக்கான எச்சரிக்கை.

ஓமந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வண்ணான்குளம் அரசர்பதி பொற்கோயிலுக்கான வருடாந்ந திருவிழா உற்சவங்கள் தொடங்கப்பெற்றுள்ளது. இது இந்துக்களின் வழிபாட்டு முறையில் தாய்த்தெய்வத்தைப் போற்றும் கண்ணகிக்கான கோயிலாக உருவாக்கப்பெற்றுள்ளது.
இந்நிலையில் கோயிலுக்குள் கடை வைப்பதற்கு ஒரு நபருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஒரு நபர் கிறிஸ்த்தவ நபராக உள்ளார். இந்நபர் கடந்ந காலங்களில் கிறிஸ்த்தவ சபைகளுடன் இணைந்து மக்களை மதமாற்றும் செயற்பாடுகளிலும் சபைகளுக்காக கட்டிடங்கள் அமைக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்ட ஒருவராவார். திருக்கேதீச்சரத்தில் சிவனுக்கான வளைவு அமைப்பதைக் கிறிஸ்த்தவ அடிப்படைவாதிகள் தடுத்து நிறுத்தியதுடன் அதனையும் உடைத்துத் தள்ளினர். ஆனால் இங்கே கிறிஸ்த்தவ மதமாற்றச் செயற்பாடுகளில் ஈடுபடும் ஒருவருக்கு இந்துக் கோயிலுக்குள் கடை நடாத்த அனுமதி வழங்கியமை பற்றி ஓமந்தையைச் சூழவுள்ள இந்து மக்கள் பாரிய விசனத்தை வெளியிட்ட வண்ணமுள்ளனர். அத்துடன் இம்முறை கோயில் உற்சவத்தைப் புறக்கணிக்கவும் முடிவெடுத்துள்ளனர். மேலும் இதுபற்றி இந்துக் கோயில்களுக்கான நிர்வாகத்தினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற செயற்பாடுகள் இந்துக்களின் புனிதத்தையும் வழிபாட்டு பெருமைகளையும் கெடுக்கும் ஒரு செயற்பாடு என்பதை இங்கே பதிவு செய்கின்றோம். அத்துடன் பொற்கோயில் செல்பவர்கள் அவதானத்துடன் மேற்படி கடை நிர்வாகத்துடன் செயற்படவும். அவர்களால் வழங்கப்படும் உணவு, தண்ணீர் முதலியவற்றை அருந்த வேண்டாம் என்று இந்து மஹா சபை வலியுறுத்தியுள்ளது. இந்து மதத்தை அழிக்க ஊடுருவும் புல்லுருவிகளைக் களையெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்