சம்மாந்துறைப் பொலிஸ் பொறுப்பதிகாரி எம். கே. இப்னு அஸார் விடுக்கும் முக்கிய அறிவிப்பு.

சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சகல பொதுமக்களுக்கும்  சம்மாந்துறைப் பொலிஸ் பொறுப்பதிகாரி  எம். கே. இப்னு அஸார் விடுக்கும் முக்கிய அறிவிப்பு.

தற்போது கதிர்காமம் , உகந்தை ஆலயங்களில் சமய வழிபாடுகள் நடைபெறுவதோடு தங்களது பிரதேசங்களிலும் ஆலய சமய வழிபாடுகள்  நடைபெற்று வருகின்றன. இந்தக் காலப்பகுதியில் பொதுமக்களாகிய நீங்கள் தங்களது பெறுமதியான ஆபரணங்கள், பணம், பொருட்கள் என்பவற்றை கவனமாகப் பாதுகாத்துக் கொள்ளும்படி வேண்டப் படுகின்றீர்கள்.

சென்ற இதேகாலப் பகுதியில் களவு, கொள்ளை, வீடு உடைத்து களவாடியமை சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றுள்ளதால் இது சம்பந்தமாக மிகவும் அவதானமாக இருக்கும்படியும், அத்தோடு அப்பிரதேசத்தில் சந்தேகத்துக்குடமான நபர்கள் சம்பந்தனாம தகவல்கள் அறிந்தால் உடனுக்குடன் பொலிஸ் நிலையத்திற்கு அவிவிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன். T.P 067 2260222, 067 2260221  .

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்