சட்டவிரோதமாக கடற்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் – டக்ளஸ்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடற்தொழிலால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேராதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி மூலமே இவ்வாறான தேவையற்ற முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கடற்தொழிலாளர்கள் முறைப்பாட்டினை முன்வைத்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், இந்த பிரச்சினை தொடர்ந்தும் நீடிக்குமானால், தேவையற்ற முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கடற்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்