கிளிநொச்சியில் வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை

கிளிநொச்சி மாவட்டத்தில்  வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினரால் புதிதாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கு முதல் கொடுப்பனவை தவிர வேறு எந்தக்கொடுப்பனவும் வழங்கப்படாததன் காரணமாக வீடுகளை  கட்டி முடிக்க முடியாது   மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு வீட்டுத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட2613 குடும்பங்களில் 2315 குடும்பங்கள் வீட்டுத்திட்டப் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டனர். இதில் 1235 பயனாளிகளுக்கு வீட்டத்திட்டத்திற்கான முதற் கட்டக் கொடுப்பனவு வழங்கப்பட்டது.  ஏனையவர்களுக்கு முதற்கட்ட கொடுப்பனவும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில்  முதற் கொடுப்பனவை பெற்றவர்கள் தொடர்ந்தும் வீட்டினை கட்டிக் முடிக்க முடியாத நிலையில் அரைகுறையாக காணப்படுவதோடு ஏனையவர்களும் வீட்டுத்திட்டத்திற்காக காத்திருக்கின்றனர். அத்தோடு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினரால் மாதிரி கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு வீடமைப்பு ஆரம்பிக்கப்பட்ட போதும் அவற்றினையும் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாதுள்ளது. இதனால் வீட்டுத்திட்ட பயனாளிகள்  பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு எப்போது அடுத்தக்கட்ட நிதி விடுப்பு எப்போதும் என்று தெரியாத நிலையிலும் பயனாளிகள் காணப்படுகின்றனர்.
எனவே இது தொடர்பில்  கிளிநொச்சி மாவட்ட வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின்  மாவட்ட முகாமையாளர் ரி. சுபாஸ்கரனை தொடர்பு கொண்டு வினவிய போது
 நிதியை படிப்படியாக விடுவிப்பதில்தாமதம் ஒன்று ஏற்பட்டுள்ளது. தலைமை அலுவலகத்திலிருந்து போதுமான நிதி கிடைக்கப்பெறவில்லை இதனாலேயே இந்த தாமதம்  ஏற்பட்டுள்ளது.  நிதி கிடைத்ததும் வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கு கிரமமாக நிதி  வழங்க்கப்படும். மேலும் இந்த நிலைமை  எ்லலா மாவட்டங்களிலும் காணப்படுகிறது. எனவும் குறிப்பிட்ட அவர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்