நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

நாட்டின் சில பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

காலநிலை அவதான நிலையம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.

இதற்கமைய சப்ரகமுவ, ஊவா, கிழக்கு ஆகிய மாகாணங்களிலும் பொலனறுவை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகலாம் என அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இடியுடன் மழை பெய்யும் பகுதிகளில் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்