ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: 500 மில்லியன் இழப்பீடு கோரி அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் காயமடைந்ததாகவும் அதற்கு 500 மில்லியன் இழப்பீடு கோரி வழங்கறிஞர் ஒருவர் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பயங்கவாதிகளினால் இலக்குவைக்கப்பட்ட ஏழு இடங்களில் ஒன்றான ஷாங்ரி-லா ஹோட்டலில் குண்டுவெடிப்பின் போது வழக்கறிஞர் மோதித ஏகநாயக்க காயமடைந்தார்.

அந்தவகையில் உயர் நீதிமன்றில் அவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில் குண்டு தாக்குதல் காரணமாக தீக்காயங்கள் அடைந்ததாகவும் அதனால் ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அவரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவில் பொலிஸ்மா அதிபர் முப்படைகளின் தளபதிகள் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உட்பட 41 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

அதன்படி, அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் மீறியதாக அறிவிக்கவேண்டும் என அவர் உயர் நீதிமன்ற உத்தரவைக் கோரியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்