சஹ்ரானுடன் தொடர்புடையோரை தடுத்துவைத்து விசாரிக்க நடவடிக்கை!

சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டில் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களையும் தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குருணாகல் – ரஸ்நாயக்கப்புர, வெலிமடை மற்றும் பேராதனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே சந்தேகத்தின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் சஹ்ரானுடன் நுவரெலியா, அம்பாந்தோட்டை மற்றும் அருப்பல ஆகிய பகுதிகளில் பயிற்சிகளைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 36 பேர், ஏற்கனவே பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பிலுள்ளனர். இவர்களில் இரண்டு மௌலவிகளும் பெண்ணொருவரும் அடங்குகின்றனரென்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்