கிழக்கிலுள்ள காணிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யவே காணி தொடர்பான திருத்தச் சட்டம் – துரைரெட்னம்

கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான முயற்சியாகத்தான் காணி தொடர்பான திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இந்த காணி தொடர்பான திருத்த சட்டத்தினை நன்கு ஆராய்ந்து முடிவெடுக்கும் வரையில் இந்த திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கக்கூடாது எனவும் தெரிவித்தார்.

அத்தோடு, அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்தும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அதனை தமிழ் மக்களின் பிரச்சினைகளை சாதகமாக கொண்டு தீர்மானங்களை எடுக்கவேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்