கைவிடாதீர் கல்முனை செயலகத்தை கூட்டமைப்புக்கு பறக்கும் குறுந்தகவல்!

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களிற்கு கிழக்கிலிருந்து குறுந்தகவல்கள் கணிசமாக அனுப்பப்பட்டு வருகிறது.

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தாவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்து, ரணில் அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டாம் என வலியுறுத்தி நேற்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஏனைய எம்.பிக்களிற்கு விரைவுத் தபால்கள் அனுப்பப்பட்டன. நேற்றைய தினம் இரா.சம்பந்தனிற்கு சுமார் 300 விரைவுத்தபால்கள் அனுப்பப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

இந்தநிலையில், இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களிற்கு இன்று காலையிலிருந்து குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்