யாழில் ‘ஸ்மார்ட் ஸ்ரீலங்கா’ அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் ‘ஸ்மார்ட் ஸ்ரீலங்கா’ அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  யாழில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் புதிதாக அமைக்கப்படவுள்ள இந்த அலுவலகத்திற்கான அடிக்கல்லை வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று (வியாழக்கிழமை) காலை நாட்டி வைத்தார்.

இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாம் மதகுருமார்களின் ஆசியுடன், கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

சுமார் 30 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கப்படவுள்ள இந்த அலுவலகம் எதிர்வரும் 2 மாதங்களில் நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் ஸ்ரீலங்கா என்பது ஜனாதிபதியின் சிந்தனையின் கீழ் வந்த ஒரு திட்டமாகும். இலங்கை உட்பட ஏனைய நாடுகளில் தமது கல்வித் தகைமைகளுக்கும் தமது சான்றிதழ்களுக்கும் ஏற்ற தொழில் எங்கு உள்ளதோ அதை இளைஞர், யுவதிகள் கண்டுபிடித்து அதற்கான வாய்ப்புக்களை பெற இந்த அலுவலகம் உதவவுள்ளது.

அத்துடன், இளைஞர், யுவதிகள் சுய தொழில் செய்ய வேண்டுமெனில் அதற்கான உதவிகளையும் இந்த அலுவலகம் முன்னெடுக்கவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்