வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு இன்று பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முறையற்ற விதத்தில் சொத்து சேகரிப்பு, சிங்களப் பெண்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்தமை உள்ளிட்ட அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக அவர் சற்றுமுன்னர் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் காரணங்களை தெளிவுப்படுத்துவதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மத்தேகொட நீதிமன்றத்துக்கு வருகைத் தராமை காரணமாக வழக்கு விசாரணைகள் பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்