புதிய தேசிய கூட்டணி ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் உதயம்!

மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.

இந்த நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன், ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் ஆகியோர் தலைமையிலான குழுக்கள் கலந்துகொண்டன.

இலங்கையில் தமிழ் பேசும் மக்களை தவிர்ந்த ஏனைய சமூகத்தினருக்கு கிடைக்கும் அனைத்து வரப்பிரசாதங்களும் தமிழ் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த தேசிய கூட்டணி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இதன்போது இ.தொ.கா. சார்பாக பொது செயலாளர் அனுஷா சிவராஜா, ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொது செயலாளர் சுரேஷ் கங்காதரன் ஆகியோர் உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.

இந்த நிகழ்வில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்