கொழும்பில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு இன்று இரவு 8 மணிவரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டே, கடுவல, மாநகர சபை எல்லை பகுதிகளுக்கும் மகரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ ஆகிய நகர சபை பிரதேசங்களுக்கும் கொட்டிகாவத்த, முல்லேரிய, பிரதேசங்களுக்கும் இரத்மலானை மற்றும் சொய்சாபுர வீடமைப்பு பிரதேசங்களுக்கும் இவ்வாறு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும்.

குறித்த பகுதிகளில் நேற்று முதல் இன்று காலை 9 மணி வரை 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோம் செய்யப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்