அரசாங்கத்துடனான உறவை ஜே.வி.பி. முறித்துக்கொள்ள வேண்டும் – பெரமுன கோரிக்கை

ஐக்கிய தேசிய முன்னணியுடன் இருக்கும் உறவை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) முறையாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் விடுதலை முன்ணனி கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் அரசுக்கு எதிராக ஜே.வி.பி.யினரால் நாடாளுமன்றத்தில் சமபர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்துடன், அரசாங்கத்துடனான தனது உறவை அவர்கள் முறித்துக்கொள்ள வேண்டும் என பொதுஜன பெரமுன கோரியுள்ளது.

இது குறித்து இன்று (வியாழக்கிழமை) அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஒவ்வொரு முறையும் அரசாங்கம் அழுத்தத்திற்கு உள்ளாகும்போது ஜே.வி.பி. அவர்களை பாதுகாத்து வந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் தற்போது அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய எந்த உரிமையும் ஜே.வி.பி.க்கு இல்லை என்றும் பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்