புதிய கூட்டணியில் இணையுமாறு மனோ தரப்பிற்கு ஆறுமுகன் அழைப்பு!

தமிழ் முற்போக்கு கூட்டணி மட்டுமல்லாது தமிழ் மக்களின் நலனைக்கருதி செயற்படும் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவே உள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

எனவே விரும்பினால் தமிழ் முற்போக்கு கூட்டணி தம்மோடு இணையலாம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி கொட்டகலையில் இன்று (வியாழக்கிழமை) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “எம்மால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டணியானது ஏனைய கூட்டணிகளை விட முற்றிலும் மாறுபட்ட அமைப்பாகும். தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே முதன்மை நோக்கமாகும்.

தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். எம்முடன் இணைந்து செயற்பட முன்வருபவர்கள் இருப்பின் அவர்களையும் சேர்த்துக்கொள்வோம். விரும்பினால் தமிழ் முற்போக்கு கூட்டணிகூட தம்மோடு இணையலாம். எவருக்கும் இங்கு கதவடைப்பு இடம்பெறாது” என தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்