கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் நியமனம் ! பட்டாசுகளால் முழங்குகின்றது கல்முனை !

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்த்து வாக்களித்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளில் ஒன்றான கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு நிரந்தர கணக்காளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இத் தகவலை தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தகவலை அறிந்த கல்முனை வாழ் தமிழர்கள் நகரமெங்கும் பட்டாசுகளை கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.அதேநேரம் நகர் எங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இளைஞர்களுடன் வெற்றி கொண்டாட்டத்தில் இணைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ராஜன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் -; எமக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றியானது எந்த இனத்திற்கோ மதத்திற்கோ எதிரானது அல்ல . எமக்கு இந்த வெற்றி கிடைப்பதற்கு முழு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பே தவிர வேற எந்த கட்சியுமல்ல. மேலும் எமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய தேரர்கள்,மதகுருமார்கள் ,பொது அமைப்பினர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் நன்றியை தொரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்