தேற்றாத்தீவு பள்ளியங் கட்டு கண்ணகி அம்மன் மஹா கும்பாபிஷேகம்

தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் மஹா கும்பாபிஷேகத்திற்கான கர்மாரம்பம் கடந்த செவ்வாய்கிழமை 09.07.2019 அன்று ஆரம்பமாகியது அதனை தொடர்ந்து பால்காப்பு சார்த்தும் நிகழ்வு 10.07.2019 புதன் கிழமை இடம் பெற்றது.

அந்த வகையில் தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மனனுக்கு புனராவர்தன உலோகபந்தன மஹா கும்பாபிஷேகம் 11.07.2019 அன்று காலை மூல மூர்த்தியான பள்ளியங் கட்டு கண்ணகி அம்மனனுக்கும் பரிவார தெய்வமான வைரவ பெருமானுக்கும் மஹா கும்பாபிஷேகம் இடம் பெற்றது.இவ் மஹா கும்பாபிஷேகத்தின் போது

வானத்தில் தேசரிஸிகள் என போற்றப்படும் பருந்துகள் ஆலயத்தினை வட்டமிட்டமையும் சிறப்பம்சமாகும்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்