சலக மக்களுக்கும் சேவையாற்றக்கூடிய தகுதி தமிழ்க் கூட்டமைப்புக்கே உள்ளது: ஹந்துன்நெத்தி

நாட்டிலுள்ள சலக மக்களுக்குமான தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய முழுத் தகுதியும் கூட்டமைப்புக்கு இருக்கின்றதென மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் பிரதமர், அரசாங்கம்  மற்றும் அமைச்சரவைக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லா  பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதாத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஹந்துன்நெத்தி கூறியுள்ளதாவது,

“அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மக்கள் விடுதலை முன்னணியை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்  முதலில் தாம் கடந்த காலங்களில் செய்த பிழைகளை நினைத்துப்பார்க்க வேண்டும்.

மேலும் மஹிந்த தமது தரப்பின் உறுப்பினர் அனைவரையும் சபைக்கு வரவழைத்து பிரேரணையை ஆதரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் வடக்கு- கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக மாத்திரம் அல்லாது அனைத்து மக்களின் நலன் கருதி சேவையாற்றக்கூடிய கட்சியாகும்.

ஆகையால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உரிய தீர்வை இம்முறையும் எடுக்குமென எதிர்பார்க்கின்றோம்.

அத்துடன் இந்த அரசாங்கம் மக்களின் பாதுகாப்பை பற்றி கவனத்தில் கொள்ளாமல் சேவையாற்றுகின்றது. இன்று கிறிஸ்தவர்களுக்கு நடந்தது நாளை தமிழர்களுக்கும் நடக்கலாம்.

ஆகையால் இந்த அரசாங்கத்தை வெளியேற்றிவிட்டு புதிய அரசாங்கமொன்றை உருவாக்க தமிழர்கள் அனைவரும் முன்வர வேண்டும்” என ஹந்துன்நெத்தி  அழைப்பு விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்