ஊழலை தடுக்க ஜனாதிபதி தவறியுள்ளார்: மஹிந்தானந்த குற்றச்சாட்டு

ஊழல் மோசடிகளை ஒழிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மத்திய வங்கி ஊழலை தடுக்க தவறியுள்ளாரென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

விஜயராமயில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்தானந்த அலுத்கமகே மேலும் கூறியுள்ளதாவது,

“ஊழலை ஒழிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், நான்கு வருடங்கள் கடந்தும் அவை குறித்த எந்ததொரு நடவடிக்கையினையும் எடுக்கவில்லை.

மாறாக இந்த அரசாங்கம் தமது ஊழலை மறைப்பதற்கு ஏனையோர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றது.

அந்தவகையில் மத்திய வங்கியின் பிணைமுறியின் முக்கிய சூத்திரதாரியான பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 10 பேர் குறித்து ஜனாதிபதி மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு வழங்கினோம். ஆனால் அவர்கள் எந்ததொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

இவ்வாறு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காப்படாவிட்டாலும் மக்களுக்கு இவ்விடயம் குறித்து வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

ஆகையால் யாரும் எதிர்ப்பார்க்காத முக்கிய அமைச்சர் ஒருவரின் மோசடி குறித்து விரைவில் அறிவிப்போம்” என மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்