பிற்போடப்பட்டது நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தினத்தில் முற்பகல் 10.30 மணியளவில் தெரிவுக்குழுவின் அமர்வு ஆரம்பமாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் நிலந்த ஜெயவர்த்தன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பணியாற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் சாட்சியமளிக்கவுள்ளனர்.

இதேவேளை பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் விசாரணை பணிப்பாளர் வருண ஜெயசுந்தர மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் தரங்க பதிரண ஆகியோரும் எதிர்வரும் 24 ஆம் திகதி சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்