கோடீஸ்வரன் கூட்டமைப்பில் இருந்து விலக்கப்பட வேண்டும், யஹ்யாகான் தெரிவிப்பு!

முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்பதன் மூலம் அவருடைய தேவைகளை சரிசெய்வதற்கான முயற்சியில் கோடீஸ்வரன் ஈடுபடுகிறார், தமிழ் பேசும் இரண்டு சிறுபான்மை சமூகமும் என்றுமே ஒற்றுமைபட்டுவிட கூடாது என்பதிலும் அவர் குறியாக இருக்கிறார். அவர் தமிழ் கூட்டமைப்பில் இருந்து முற்றாக விலக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமான ஏ.சி.யஹ்யாகான் தெரிவித்துள்ளார்.

முழு முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக காட்டி நாளும் பொழுதும் மக்கள் மத்திலயில் விஷ கருத்துக்களையே பரப்பி வருகிறார், இவ்வாறு தன்னை இனம்காட்டுவதனால் கோடீஸ்வரன் தமிழ் மக்களின் அபிமானியாக ஒரு விம்பத்தினை ஏற்படுத்தும் முயற்சிக்கு தமிழ் மக்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். இவ்வாறான இனவாதிகளை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும். சிறுபாண்மை தமிழ் பேசும் மக்களின் நெருக்கமான உறவுக்குள் பிளவுகளை உண்டுபண்ணும் இவர்களை சரியாக இனம்காண வேண்டும்.
தூங்கி எழும்பினால் இனவாத பேச்சுக்களையே பேசுகிறார். இவரின் கீழ்த்தரமான அரசியல் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ் மக்கள் முன்வர வேண்டும்.

அத்துடன் தமிழ் தலைவர்களான சம்பந்தன் ஐயா சுமேந்திரன் ஐயா ஸ்ரீதரன் ஐயா போன்றவர்களிடம் இவர் அரசியல் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் யஹ்யாகான் தெரிவித்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்