ஏழு நீதியரசர்களைக் கொண்ட குழாம் முன்னிலை விசாரணைக்கு வருகிறது பூஜித் – ஹேமசிறிக்கு எதிரான வழக்கு

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்காதமையினால் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

கட்டாய விடுமுறையிலுள்ள  பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக இந்த மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஏழு நீதியரசர்களைக் கொண்ட குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தார்.

பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது பதவியை ஏப்ரல் 25 ஆம் திகதி இராஜினாமா செய்த நிலையில், ஏப்ரல் 29 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்