பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்த முன்னாள் போட்டியாளர்! லீகல் நோட்டீஸ் அனுப்புவாரா கமல்?

விஜய் டிவி நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இதன் மூன்றாவது சீசன் பரபரப்பாக ஓடிவரும் நிலையில், இரண்டாவது சீசன் போட்டியாளரான நடிகர் டேனி இது பற்றி விமர்சித்துள்ளார்.

போட்டியாளர்களை வெளியேற்றுவதற்காக நடத்தப்படும் வாக்கெடுப்பு முறையில் வெளிப்படைத்தன்மை தேவை. பல குளறுபடிகள் நடக்கிறது. சென்ற முறை சென்ராயன் வெளியேற்றப்பட்டபோது பெரிய சந்தேகம் எழுந்தது. என் மனைவியே அவருக்கு அதிக ஆதரவு இருப்பதை உறுதி செய்யும் அளவுக்கு சில இணையதள வாக்கெடுப்புகளை காட்டினார். ஆனால் அவர் வெளியேற்றப்பட்டது எப்படி என சந்தேகம் எழுந்தது என அவர் கூறியுள்ளார்.

மேலும் வாக்கெடுப்பு பற்றி இப்படி பேசியுள்ளதால் பிக்பாஸில் இருந்து நிச்சயம் லீகல் நோட்டீஸ் வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்